அருமையான மீன் புட்டு செய்வது எப்படி?





அருமையான மீன் புட்டு செய்வது எப்படி?

பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணவில் ஒன்றாக இருக்கிற மீன்களில் புரதம், கால்சியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ் என மனிதர்களுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. 

அருமையான மீன் புட்டு செய்வது எப்படி?

தவிர, மட்டன், சிக்கன்போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும். 

மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம்.மீன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். மீன் மிகவும் பிடித்தாலும் அதனை வாங்குவதற்கு தயங்குவார்கள். 
காரணம் மீனில் அதிகம் முள்கள் இருக்கும் என்ற பயத்தில் அதனை வாங்க மருத்தவர்கள் அதனை மீறி வாங்கினாலும் பெரியவர்கள் அதனை சாப்பிட்டு விடுவார்கள் ஆனால் குழந்தைகளுக்கு அதனை எடுத்து சரியாக சாப்பிட முடியாது. 

அதனால் சாப்பிடாமல் விடக்கூடாது காரணம் மீன் அதில் அதிகப்படியான நன்மைகள் உள்ளது. இப்போது குழந்தைகளுக்கு பிடித்தமான மீன் புட்டை எப்படி செய்வதென்று பார்க்கலாம். இது மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் : 

மீன் – 500 கிராம்

இஞ்சி – சிறிய துண்டு

வெங்காயம் – 15

பச்சை மிளகாய் – 7

பூண்டு – 6 பல்

சீரகம், கடுகு, உளுந்தம் பருப்பு, உப்பு – தேவையான அளவு

செய்முறை :
மீனை சுத்தம் செய்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து முள்ளை எடுத்து விட்டு உதிர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம் போட்டு தாளித்த பின் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டை போட்டு சிறிது வதக்கியபின் ப.மிளகாய், வெங்காயத்தைபோட்டு 2 நிமிடம் வதக்கவும்.

அடுத்து அதில் மீன், உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான மீன் புட்டு ரெடி!
குறிப்பு :

இதில் விரும்பினால் முட்டை சேர்த்துக் கொள்ளலாம். அதிக முள் இல்லாத எந்த மீனிலும் இந்த புட்டை செய்யலாம். சுறா புட்டை விட மிகவும் சுவையாக இருக்கும். 

நெத்திலி மீனில் புட்டு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். விருப்பப் பட்டால் மிளகும் தாளிக்க பயன்படுத்தலாம். கூடுதல் சுவையாக இருக்கும்.
Tags: