புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ் செய்முறை / Protein Rich Nuts Rice Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
புரத​ச் சத்துக்கள் அதிகம் நிறைந்த நட்ஸ் உடல் ஆரோக்கி யத்திற்கு மிகவும் உதவுகிறது. 
புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்
எளிமையாக தயாரிக்கக் கூடிய புரத உணவுகளை அன்றாட உணவு பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் உடல் நலத்தை சீராக பரமாரிக் கலாம்.

இன்றைய தலை முறையினர் அளவான, ஆடம்பரமான உணவுகளை சுவைக்கவே விரும்பு கின்றனர். 

எனவே சுவையுடன் புரதம், கால்ஷியம், இரும்பு என சத்துக்கள் நிறைந்த உணவுகளை சமைத்து சாப்பிட்டால் நோய்நொடி இல்லாமல் உடல் ஆரோக்கி யத்தை பாது காக்கலாம்.

சுவையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம், 

தேவையான பொருட்கள் :

1. சாதம் - ஒரு கப்

2. வறுத்த வேர்கடலை, பொட்டுக் கடலை - தலா 5௦ கிராம்,

3. முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு - தலா 1௦,

4. உலர் திராட்சை - 2௦,

5. நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :

வாணலியில் நெய் விட்டு சாதம், உப்பு தவிர, வறுத்த வேர்கடலை, பொட்டுக் கடலை, பாதம் பருப்பு, முந்திரிப் பருப்பு, ஆகிய பொருட்களை சேர்த்து பொன்னி றமாக வறுக்கவும்.

இதில் பச்சை மிளகாய் அல்லது கார மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். சிறிது மஞ்சள் தூள் சேர்த்தால் சுவையும் கூடும், உடலுக்கும் நல்லது.

வடித்து வைத்த சாதத்தை இந்த கலவையில் கொட்டி உப்பு போட்டு கிளறவும்.

விருப்பப் பட்டால் சிறிது மிளகுத் தூள், கருவேப்பிலை, புதினா இலை சேர்த்து கிளறி பரிமாறவும்.

இந்த உணவை குழந்தைகள் வேண்டி விரும்பி உண்பர். மேலும், ஊட்டச் சத்து மிகுந்த இந்த நட்ஸ் ரைஸ் உடனடி தெம்பை அளிக்கும்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚