கேரளா சிக்கன் வறுவல் செய்முறை | Kerala Chicken Curry

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையான பொருள்கள்

சிக்கன் - அரை கிலோ

சோம்பு - 1 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 7

பூண்டு - 10 பல்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்

செய்முறை
கேரளா சிக்கன் வறுவல்

முதலில் சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி வைத்து கொள்ளவும் 

பின்பு மிக்ஸியில் காய்நத மிளகாய், சோம்பு , பூண்டு, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, 

சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

கழுவி வைத்துள்ள சிக்கனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி, 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 

அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.

தண்ணீர் முற்றிலும் வற்றி சிக்கன் நன்கு வெந்தவுடன் இறக்கவும். கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் ரெடி

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚