மினி பிஸா செய்வது | Mini Pizza !





மினி பிஸா செய்வது | Mini Pizza !

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்

கோதுமை மாவு - 1/4 கப்

ஈஸ்ட் - 1/2 டீஸ்பூன்

வெதுவெதுப்பான நீர் - 1/4 கப்

சர்க்கரை - 1 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்

மேலே தூவ...

பிட்சா சாஸ் - 1/4 கப்

காய் கறிகள் 1/2 கப் (பேபி கார்ன், வெங்காயம் மற்றும் குடை மிளகாய் நீளமாக வெட்டியது)
சீஸ் - 1 கப் (துருவியது)

சில்லி ப்ளேக்ஸ் - தேவை யான அளவு

ஓரிகானோ - தேவை யான அளவு

செய்முறை:

பேபி கார்ன், வெங்காயம் மற்றும் குடை மிளகாய் சற்று பெரிய துண்டு களாக வெட்டி கொள்ளவும். ஒரு அகன்ற பாத்திரத் தில் தண்ணீர், எண்ணெய், உப்பு மற்றும் ஈஸ்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
மினி பிஸா

ஒரு பாத்திரத் தில் மைதா மற்றும் கோதுமை மாவை ஒன்றாக கலந்து, அதனுடன் கலந்து வைத்து ள்ள ஈஸ்ட் தண்ணீர், எண்ணெய் சேர்த்து பிசைத்து சப்பாத்தி மாவு பதத்தில் பிரட்டி 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது மாவானது சற்று அதிகமாகி இருக்கும். பின் அதனை சிறு உருண்டை களாக உருட்டி, 1/4 இன்ச் கெட்டியான சப்பாத்தி போன்று தேய்த்து,
ஒரு வட்ட மான டிபன் பாக்ஸ் கொண்டு துண்டு களாக்கி, ஆங்காங்கே போர்க் கரண்டி (முள் கரண்டி) கொண்டு ஓட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும். இதனை பேக்கிங் ட்ரேயில் அலுமினியம் தாளை விரித்து, அதன் மேல் இந்த வட்டத் துண்டுகளை வைத்து, 

முதலில் அதன் மேல் பிட்சா சாஸ் ஊற்றி, பின் சிறிது சீஸ் பரப்பி, காய்கறி களை வைத்து, இறுதியில் மீண்டும் சிறிது சீஸைத் தூவி, மைக்ரோ ஓவனில் 180 டிகிரியில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவை யான மினி பிட்சா ரெடி! இதன் மேல் சிறிது சில்லி ப்ளேக்ஸ் மற்றும் ஓரிகானோ தூவி பரிமாறுங்கள்.
Tags: