வேர்க்கடலை கொழுக்கட்டை செய்வது | Verkadalai Kozhukattai !





வேர்க்கடலை கொழுக்கட்டை செய்வது | Verkadalai Kozhukattai !

தேவையான பொருள்கள் :
அரிசி மாவு - 1/4 கப்,

தண்ணீர் - 1/2 கப்,

உப்பு - தேவைக்கு,

சர்க்கரை - 1 டீஸ்பூன்,

நெய் - 1 டேபிள் ஸ்பூன்.

பூரணத்திற்கு...

பொடித்த வேர்க்கடலை - 1/4 கப்,

வெல்லம் - 1/4 கப் + 2 டேபிள் ஸ்பூன்,

அரிசி மாவு - 1/4 டீஸ்பூன்,

ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்,

நெய் - 1 டேபிள் ஸ்பூன்,

தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை : 
வேர்க்கடலை கொழுக்கட்டை

கடாயில் தண்ணீர், உப்பு, சர்க்கரை, நெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இத்துடன் அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து வேக விடவும்.

மற்றொரு கடாயில் வெல்ல த்தை கரைத்து, வேர்க் கடலை, தேங்காய்த் துருவல், ஏலக்காய் தூள், அரிசி மாவு, நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

ஆறியதும் சிறு சிறு உருண்டை களாக செய்து கொள்ளவும். கொழுக் கட்டை அச்சில் மேல் மாவை வைத்து உள்ளே பூரண த்தை வைத்து மூடி ஆவியில் 10-12 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமா றவும்.
Tags: