சுவையான கேரமல் கஸ்டர்ட் செய்வது எப்படி?





சுவையான கேரமல் கஸ்டர்ட் செய்வது எப்படி?

தேவையானவை:

பால் - 400 மில்லி

முட்டை - 3 (ஃப்ரிட்ஜில் வைக்காத முட்டை)

சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்

வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்

கேரமல் செய்ய:

சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 2 டீஸ்பூன்

இட்லி, தோசை மாவு கடையில் வாங்குவது நல்லதா? கெட்டதா? விழிப்புணர்வு !

செய்முறை:

சுவையான கேரமல் கஸ்டர்ட் செய்வது எப்படி?

சுவையான கேரமல் கஸ்டர்ட் செய்வது எப்படி?

நான்கு கப் கொள்ளளவு உள்ள ஒரு அலுமினிய பாத்திரத்தில், (இந்தப் பாத்திரம் ரைஸ் குக்கர் பாத்திரத்தின் உள்ளே வைப்பது போல சிறிய பாத்திரமாக இருக்க வேண்டும்.) 
கேரமல் செய்யக் கொடுத்த சர்க்கரையைச் சேர்த்து கேஸ் அடுப்பில் வைத்து சர்க்கரை கருக்கும் வரை விட்டு, பிறகு கொடுத்த தண்ணீரை ஊற்றி, சிரப் போல செய்து அடுப்பை அணைக்கவும். 

ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு அடித்து வைக்கவும். அதில் வெது வெதுப்பான பால், வெனிலா எசன்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். 

இதை வடிகட்டி கேரமல் செய்த பாத்திரத்தில் ஊற்றவும். இதில் பாலை ஊற்றவும். ரைஸ் குக்கர் பாத்திரத்தின் உள்ளே தட்டு வைத்து, அதில் தண்ணீர் ஊற்றவும். 

பிறகு அதில் கேரமல் இருக்கும் பாத்திரத்தை வைக்கவும். இந்தப் பாத்திரத்தின் பாதியளவை தண்ணீர் தொட்டு இருப்பது போல தண்ணீர் இருக்க வேண்டும். இனி இதை மூடி குக் மோடில் வைக்கவும்.

குக்கரில் தண்ணீர் ஒரே மாதிரி கொதிக்க ஆரம்பித்ததும் (அடிக்கடி திறந்து பார்த்து சீராக கொதிப்பதை உறுதிப் படுத்திக் கொள்ளவும்), குக்கரை கீப் வார்ம் மோடுக்கு அழுத்தி விடவும். 

பிறகு 25-30 நிமிடங்கள் வரை விட்டு குக்கரை நிறுத்தி விடவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.
குறிப்பு:

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் கண்டிப்பாக கீப் வார்ம் மோடுக்கு அழுத்தி விட வேண்டும். இல்லை யென்றால், பால் திரிந்து விடும். காரமல் கஸ்டர்ட் செய்ய அலுமினிய பாத்திரம் உகந்தது.
Tags: