எளிமையான தக்காளி சாம்பார் செய்முறை / Simple tomato Sambar recipe !





எளிமையான தக்காளி சாம்பார் செய்முறை / Simple tomato Sambar recipe !

விடுமுறை நாட்களில் அசைவ உணவுகளை காரமாக சமைத்து சாப்பிட்டு, வயிறு ஒருமாதிரி உள்ளதா?
தக்காளி சாம்பார்
அப்படி யெனில் தக்காளி கொண்டு சிம்பிளான முறையில் சாம்பார் செய்து சுவை யுங்கள்.

இங்கு எளிமை யான முறையில் தக்காளி சாம்பார் எப்படி செய்வ தென்று கொடுக்கப் பட்டுள்ளது.

அதைப் படித்து முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளு ங்கள்.

தேவையான பொருட்கள்:

மைசூர் பருப்பு / துவரம் பருப்பு - 1/2 கப்

தக்காளி - 2 (நறுக் கியது)

பச்சை மிளகாய் - 2

தண்ணீர் - 2 கப் + தேவை யான அளவு

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

புளிச்சாறு - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள்-1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி,
மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை லேசாக மசித்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் அதோடு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவை யான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.

பின்பு புளிச்சாறு ஊற்றி, அடுப்பில் வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

பின் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, 

தாளிப்பத ற்கு கொடுத் துள்ள பொருட்க ளை சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சாம்பாரு டன் சேர்த்து இறக்கி, கொத்த மல்லி தூவி கிளறினால், தக்காளி சாம்பார் ரெடி!
Tags: