ஓட்ஸ் பிரியாணி கஞ்சி செய்முறை | Oats Biriyani Porridge !





ஓட்ஸ் பிரியாணி கஞ்சி செய்முறை | Oats Biriyani Porridge !

தேவையான பொருள்கள் : -

நறுக்கிய பெரிய வெங்காயம் - 2,

தக்காளி - 1, கேரட் - 1,

பீன்ஸ் - 5,

முட்டைகோஸ் - 1/2 கப்,

கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்,

பச்சை பட்டாணி - 1/4 கப்,

கீறிய பச்சைமிளகாய் - 2,
புதினா இலை - 1 டேபிள்ஸ்பூன் (நறுக்கியது)

எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்,

இஞ்சி - பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,

தயிர் - 1 டீஸ்பூன்,

நெய் - 10 கிராம்,

பட்டை - 1 துண்டு,

கிராம்பு - 2,

ஏலக்காய் - 1,

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

தேங்காய்ப்பால் - 1/2 கப்,

ஓட்ஸ் - 1 1/4 கப்.

செய்முறை : -
ஓட்ஸ் பிரியாணி கஞ்சி
நெய்யை சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெடிக்க விடவும். வெங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும். இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

அதன் மேல் நறுக்கிய காய்கறிகள், தக்காளி, பட்டாணி, பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் கிளறவும். 1 கப் தண்ணீர் சேர்த்து காய்கறிகளை வேக விடவும்.
வெந்த காய்கறி கலவையுடன் தேங்காய்ப் பால், எலுமிச்சைச்சாறு சேர்த்து கொதிக்கவிட்டு உப்பு, காரம் சரிபார்த்து அடுப்பை விட்டு இறக்கவும். 

2 1/2 கப் தண்ணீரை கொதிக்க விட்டு, அதில் ஓட்ஸை சேர்த்து நன்றாக வேக விடவும். வெந்த ஓட்ஸ் கலவையை, காய்கறி கலவையுடன் ஒன்றாக சேர்த்து கொதிக்க விடவும். கொத்த மல்லித்தழை சேர்த்து சூடாக பரிமாறவும்.
Tags: