சுவையான நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி?





சுவையான நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி?

கட்லட் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஏற்ற உணவு வகை. இது மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றதாகும். 
சுவையான நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி?
அது தவிர திடீரென வரும் விருந்தினர்களுக்கு உடனடியாக  செய்வதற்கு ஏற்றது. நூடுல்ஸ் கட்லெட் நூடுல்ஸை  கொண்டு செய்யப்படுகிறது. 
கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, முட்டைகோஸ், காலிஃபிளவர், குடைமிளகாய், ஆகியவை சேர்த்துக் கொள்ளலாம். 

இது தவிர உங்கள் விருப்பமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான நூடுல்ஸ் கட்லட் நீங்களும் எளிமையான முறையில் செய்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருள்கள் : -

நூடுல்ஸ் - 200 கிராம்,

வேக வைத்த கலந்த காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, முட்டைகோஸ், காலிஃபிளவர், குடைமிளகாய்) - 1/2 கப்,

வேக வைத்து உரித்த உருளைக்கிழங்கு - 3,

நறுக்கிய பச்சை மிளகாய் - 2,

பெரிய வெங்காயம் - 2,

பூண்டு - 2,

கொத்த மல்லித்தழை - 1 டேபிள் ஸ்பூன்,

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,

தக்காளி சாஸ்,

பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு.
செய்முறை : -
நூடுல்ஸ் கட்லெட் செய்வது
நூடுல்ஸை 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு வேகவைத்து வடித்து தண்ணீரில் அலசி திரும்ப வடித்து வைக்கவும். 

நூடுல்ஸ், பொரிக்கும் எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து

அதில் நூடுல்ஸை சேர்த்து மெதுவாக நூடுல்ஸ் உடையாமல் பிசையவும். 
எண்ணெய் தடவிய கைகளை வைத்து சரிசம எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி கட்லெட் ஆக தட்டி எடுக்கவும். 

தோசை கல்லை சூடாக்கி நூடுல்ஸ் கட்லெட்டை பொன்னிறமாக இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்து, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
Tags: