தினை சீரக தோசை செய்வது எப்படி?





தினை சீரக தோசை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :
தினை - ஒரு கப்

அரிசி மாவு - கால் கப்

தயிர் - ஒரு கப்

தண்ணீர் - 2 கப்

மிளகு தூள் - 1 மேசைக் கரண்டி

பச்சை மிளகாய் - 2

சீரகம் - அரை தேக்கரண்டி

இஞ்சி - 1 துண்டு

வெங்காயம் - 2

தாளிக்க :

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மிளகாய் வற்றல் - 2

செய்முறை :

இஞ்சி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். தினை அரிசியை வெறும் வாணலி யில் நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். 

தினை சீரக தோசை
ஒரு அகண்ட பாத்திரத் தில் பொடி பண்ணிய தினை ரவா, அரிசி மாவு, தயிர், தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும். 

வேண்டு மென்றால் தண்ணீர் சேர்த்துக் கொள்ள லாம். கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சை யாக சேர்த்து அதனுடன், மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி,

பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும். கலந்த மாவை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தாளிக்க வேண்டிய வைகளை தாளித்து அதனுடன் சேர்க்க வேண்டும்.
கருத்தரிக்க முடியாமல் போக காரணம்? கருத்தரிக்க உதவும் உணவுகள் !
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி 

இரு புறமும் எண்ணெண் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும். இதற்கு தொட்டு கொள்ள தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.
Tags: