சுவையான நண்டு வறுவல் செய்வது எப்படி?





சுவையான நண்டு வறுவல் செய்வது எப்படி?

உடலின் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், செலெனியம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் ஆதாரமாக நண்டு இறைச்சி விளங்குகிறது. 
சுவையான நண்டு வறுவல் செய்வது எப்படி?
கெட்ட கொலஸ்ட்ரால் அளவு உடலில் அதிகரிப்பதால் மாரடைப்பு மற்றும் வாதம் உண்டாகும் அபாயம் ஏற்படுகிறது. நண்டுவில் நிறைய செலீனியம் உள்ளது. 

நம்முடைய உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதத்தினை தடுக்க இந்த செலீனியம் சத்துக்கள் உதவுகின்றன. 

செலீனியம், தைராய்டு சுரப்பிகளின் ஆக்சிஜனேற்ற சேதங்களை தடுப்பதன் மூலம், அவற்றின் சீரான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இதன்மூலம் தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கும் தூண்டுகோலாகிறது. 

கால்சியம் அதிகம் உள்ளதால், எலும்பு தேய்மான பிரச்சனைகளுக்கு அருமருந்தாகிறது. முடக்கு வாதத்தையும் இந்த நண்டுகள் தடுக்கின்றன. ரத்த சுத்திகரிப்புக்கு பேருதவி புரிகிறது. 

நண்டில் குரோமியம் நிறைய உள்ளதால், ரத்த சர்க்கரை அளவு, இன்சுலின் அளவு ஆகியவற்றை குறைக்கவும், டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் அளவை சீராக பராமரிக்கவும் இந்த கடல்வாழ் உயிரினம் உதவுகிறது. 
நாட்பட்ட இதய நோய் பாதிப்புகள் இருப்பவர்கள் நண்டு எடுத்துக் கொள்வதால் அதன் பாதிப்பு குறைகிறது மற்றும் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கிறது. 

நண்டு இறைச்சியில் செலெனியம் அதிக அளவில் காணப்படுகிறது. ப்ரீ ரேடிகல் என்னும் தீங்கு விளைவிக்கும் கூறுகளிடமிருந்து அணுக்கள் மற்றும் திசுக்களை சேதமடையாமல் பாதுகாக்க செலெனியம் உதவுகிறது. 

சரி இனி நண்டு கொண்டு சுவையான நண்டு வறுவல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை :

நண்டுகள் (மீடியமானது) - 6

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 1

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க தேவையானவை :

இஞ்சி - சிறுதுண்டு,

சின்ன வெங்காயம் - 10 ,

காய்ந்த மிளகாய் - 10 ,

சீரகம் - 1 டீஸ்பூன்,

பூண்டு பல்- 5 ,

தனியா - 2 டீஸ்பூன்
செய்முறை :
சுவையான நண்டு வறுவல் செய்வது எப்படி?
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

இதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் நீர் ஊற்றி தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், நண்டுகளைப் போடவும். மெல்லிய தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும். 

நண்டுகள் வெந்து, மசாலா கலவையுடன் சேர்ந்து கெட்டி யானதும் இறக்கிப் பரிமாறவும்.
Tags: