காளிஃபிளவர் முட்டை வறுவல் செய்முறை / Kali Flower Egg Curry !





காளிஃபிளவர் முட்டை வறுவல் செய்முறை / Kali Flower Egg Curry !

தேவையான பொருட்கள்

காளிஃபிளவர் -1

முட்டை - 1 ½

வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 10

உப்பு - தேவைக்கேற்ப

சிகப்பு கலர் - ஒரு சிட்டிகை

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

சீரகத் தூள் - 1 டீஸ்பூன்

வெள்ளை மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 ½ டீஸ்பூன்

சோம்பு தூள் - ½ டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை
காளிஃபிளவர் முட்டை வறுவல்
ஒரு பாத்திரத்தில் காளிஃபிளவர், உப்பு மஞ்சள் தூள் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்த பின் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் வெள்ளை மிளகுத் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், சோம்புத் தூள், மிளகாயத் தூள், உப்பு,

எடுத்து வைத்த காலி ஃபிளவர், முட்டை போட்டு பிசைந்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு

மற்றும் உப்பு சேர்த்து வதக்கி பின்பு வறுத்து வைத்த காளிபிளவர் சேர்த்து சிறிதளவு மிளகாய்த் தூள் மற்றும் மல்லித்தழை தூவி 5 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.

குறிப்பு

சப்பாத்தி, வெறும் சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றுக்கு பொருந்தும்.
Tags: