ஹரி மிர்ச்சி கோஸ் புலாவ் செய்முறை / Hari Mirchi pulao Recipe Goes !





ஹரி மிர்ச்சி கோஸ் புலாவ் செய்முறை / Hari Mirchi pulao Recipe Goes !

தேவையான பொருட்கள்

மட்டன் - ½ கிலோ

பச்சை மிளகாய் - 3

வெங்காயம் - 2

பாஸ்மதி அரிசி - 400 கிராம்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 ½ டீஸ்பூன்

தனியா -1 டீஸ்பூன்

ஜாதி பத்திரி - 1

ஜாதிகாய் தூள் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

நெய் - 3 டீஸ்பூன்

தயிர் - ½ டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

தனியா, ஜாதி பத்திரி, ஜாதிக்காய் தூள், சீரகம் இவை அனைத்தும் தனித்தனியாக வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.

ஹரி மிர்ச்சி கோஸ் புலாவ்

குக்கரில் மட்டன், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், இரண்டு தேக்கரண்டி தயிர், அரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து 8 முதல் 10 விசில் வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
இன்னொரு குக்கரில் நெய், எண்ணெய், சீரகம், புதினா, பச்சை மிளகாய், வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கிய பின் அரைத்த மசாலாவை சேர்த்து 

அதன் பச்சை வாசனை போன பின்,வேக வைத்துள்ள மட்டன் சேர்க்கவும். அத்துடன் அரை கப் தயிர் தேவையான உப்பு, வெந்நீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

அதன்பின் பாஸ்மதி அரிசி, கொத்து மல்லி, சிறிதளவு புதினா மற்றும் நெய் சேர்த்து இரண்டு விசில் வைத்து இறக்கும் தருவாயில் நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.
Tags: