சப்பாத்திக்கு அருமையான பெங்காலி சிக்கன் கறி செய்வது எப்படி?





சப்பாத்திக்கு அருமையான பெங்காலி சிக்கன் கறி செய்வது எப்படி?

கோதுமையில் கார்போ ஹைட்ரேட் நிறைந்துள்ளதால் நாள் முழுவதும் ஆற்றல் சக்தியை உடலுக்கு அளித்து சுறுசுறுப்பும் அளிக்கிறது. மேலும் மூளையின் செயல்திறனும் அதிகரிக்கிறது. 
சப்பாத்திக்கு அருமையான பெங்காலி சிக்கன் கறி செய்வது எப்படி?
நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு போன்ற நாள் பட்ட வியாதிகளால் அவஸ்தைப் படுவோருக்கு சப்பாத்திதான் சிறந்த டயட் உணவு.  

நீங்கள் சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீர் பயன்படுத்துங்கள். அவ்வாறு தண்ணீர் ஊற்றிய பின் மாவை நீண்ட நேரம் நன்கு அழுத்தம் கொடுத்து பிசையவும். 

இப்படி செய்வதால் சப்பாத்தி மென்மையாக வரும். மாவை பிசைவதற்கு முன், அதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். இதன் மூலம், சப்பாத்தி சுவையும் நன்றாக இருக்கும். 
மேலும் சப்பாத்தி மென்மையாக மாறும். மாவை பிசைந்த பிறகு சிறிது நேரம் மூடி வைக்கவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு, ஈரமான கைகளால் மாவை மீண்டும் ஒரு முறை பிசைந்து, பின்னர் சப்பாத்திக்கான மாவை திரட்டுங்கள்.

சப்பாத்தி அதிக நேரம் சுவையாகவும் மென்மையாகவும் வைத்திருக்க விரும்பினால், மோர், தயிர் அல்லது பால் சேர்த்து மாவை பிசையவும். இதனால் சப்பாத்தி மிகவும் மென்மையாக இருக்கும். 

சில வாழைப்பழமும் சேர்ப்பதுண்டு. சப்பாத்தி சுடும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். 

உதாரணமாக, அதை தோசைக்கல்லில் வைத்து, அதை ஒரு முறை இரண்டு புறமும் சூடாக்கி பின் அதை அப்படியே எடுத்து நேரடியாக தீயில் காட்டினால் நன்கு உப்பி சாஃப்டாக வரும்.

தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ

கடுகு எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு -1/2 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

சோம்பு - 3/4 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

வெங்காய விதை - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்

வெங்காயம் - 2

மிளகாய்த் தூள் - 1 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

சீரக்த் தூள் - 1/2 டீஸ்பூன்

தக்காளி - 2

கசகசா விழுது - 50 கிராம்

பச்சை மிளகாய் - 1

கொத்துமல்லி - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு
மிக்சி வாங்குவதற்கான வழிகாட்டி !
செய்முறை
சப்பாத்திக்கு அருமையான பெங்காலி சிக்கன் கறி செய்வது எப்படி?
கசகசாவை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் கடுகு எண்ணெய் ஊற்றி,பின் சிறிதளவு கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, வெங்காய விதை, காய்ந்த மிளகாய், வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போகும் வரை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகத்தூள் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனைப் போட்டு 

அதில் உப்பு, தக்காளியைச் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேக விடவும்.
இந்திய கேப்டனுக்கு அமெரிக்கா பல மில்லியன் தர முன் வந்ததா?
சிக்கன் நன்றாக வெந்தபின் தயாரித்து வைத்துள்ள கசகசா விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்து மல்லி இவற்றைச் சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.
குறிப்பு

சப்பாத்தி, பரோட்டோ, புல்கா, புலாவ் போன்றவைக்கு அருமையான சைட் டிஷ் இது.
Tags: