சிக்கன் அனார்தான (ட்ரை) செய்முறை | Chikken Anaarthan (Tri) !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையான பொருட்கள்

சிக்கன் – ½ கிலோ

அனர்தான (மாதுளை விதை) – 2 டீஸ்பூன்

வெந்தயம் – ½ டீஸ்பூன்

தனியா – 2 டீஸ்பூன்

மிளகு – 2 டீஸ்பூன்

பூண்டு – 6 பல்

தேங்காய் – 2 துண்டு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

காஷ்மீரி மிளகாய் - 4

காய்ந்த மிளகாய் - 2

சீரகம் – 1 டீஸ்பூன்

கசகசா – 2 டீஸ்பூன்

கல்பாசி – ½ டீஸ்பூன்

வெங்காயம் - 2

புளித் தண்ணீர் – எலுமிச்சை அளவு புளியைக் கரைத்தது

கொத்துமல்லி – ஒரு கொத்து

பட்டை - 2

ஏலக்காய் - 3

கிராம்பு - 5

பிரயாணி இலை - 2

மராத்தி முங்கு - 1

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

எண்ணெய் & நெய் – தலா 2 டீஸ்பூன்

செய்முறை
சிக்கன் அனார்தான ட்ரை

ஒரு வாணலியில் சிறிதளவு வெந்தயம், தனியா, மிளகு, காஷ்மீரி மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம், கசகச, பட்டை, ஏலக்காய், கிராம்பு

இவை அனைத்தும் நன்றாக வறுத்து நன்றாகப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிதளவு நெய் விட்டு பல்லு பல்லாக நறுக்கிய தேங்காயை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, கல்பாசி, ஏலக்காய், மராத்தி முங்கு, காய்ந்த மிளகாய்,

இடித்த பூண்டு இவை அனைத்தும் நன்றாக வதக்கி பிறகு நறுக்கிய வெங்காயம், 

மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு மற்றும் சிக்கன் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து

ஒரு விசில் விட்ட பிறகு அரைத்து வைத்துள்ள கலவையை தேவையான அளவு மற்றும் 

அனர்தான தூள் மற்றும் சிறிதளவு புளித்தண்ணீர் சேர்த்து, மற்றும் உப்பு, கொத்துமல்லி,

கறிவேப்பிலை சேர்த்து மீண்டும் ஒரு விசில் வந்த பிறகு pressure அடங்கியவுடன் வறுத்து வைத்துள்ள தேங்காயை தூவி பறிமாறவும்.

குறிப்பு

இதை அனைத்து விதமான வெரைட்டி ரைஸ், ப்ரைடு ரைஸ், புலாவ், இட்டிலி, பொங்கல், தோசை, இடியாப்பம் இவை அனைத்துக்கும் பொருந்தும்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚