டிராகன் சில்லி கான் செய்முறை !





டிராகன் சில்லி கான் செய்முறை !

தேவையான பொருட்கள்

சோளம் பிஞ்சு - 1

மைதா - 1 டீஸ்பூன்

சோள மாவு - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்

முட்டை - 1/2

சோயா சாஸ் - 1 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

பூண்டு - 6

வெங்காயம் - 2

மூன்று வண்ண குடை மிளகாய்கள் (சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள்)

மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்

தக்காளி சாஸ் - 1 1/2 டீஸ்பூன்

சிவப்பு கலர் - ஒரு சிட்டிகை

செய்முறை
டிராகன் சில்லி கான்

ஒரு பாத்திரத்தில் சோள பிஞ்சு, மைதா, சோள மாவு, முட்டை கரு, சோயா சாஸ், உப்பு, மிளகாய்த் தூள், சிவப்பு கலர் பொடி

ஒரு சிட்டிகை போட்டு பிசைந்து பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு, சதுரமாக நறுக்கிய வெங்காயம், சதுரமாக நறுக்கிய மூன்று வண்ண குடை மிளகாய், 

உப்பு சேர்த்து வதக்கி அத்துடன் மிளகாய் விழுது மற்றும் சோயா சாஸ், தக்காளி சாஸ்

மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து அதன் பச்சை வாசனை போன பின்பு வறுத்து வைத்துள்ள சோள பிஞ்சு போட்டு கிளறவும்.

இறுதியில் கரைத்து வைத்துள்ள சிவப்பு கலர் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் வெங்காயத் தாள் தூவி பரிமாறவும்.

குறிப்பு

பரோட்டா, சப்பாத்தி, நான் போன்ற உணவுகளுக்குப் பொருந்தும்.
Tags: