ராய கோலா பிரியாணி செய்வது எப்படி?





ராய கோலா பிரியாணி செய்வது எப்படி?

பிரியாணி என்ற வார்த்தையைக் கேட்டதும் பெரும்பாலானோருக்கு ஐம்புலன்களும் நடனமாடும். அப்படிப்பட்ட இதன் சொந்த ஊர் இந்தியா அல்ல என்பது தான் நிதர்சனம்!
ராய கோலா பிரியாணி செய்வது எப்படி?
பிரியாணி என்பது அரிசி, மசாலாப் பொருட்களுடன் முட்டை, மற்றும் ஆடு, மாடு, கோழி இறைச்சி, மீன் அல்லது காய்கறிகள் சேர்த்து சமைக்கும் உணவை குறிக்கும். 
பொதுவாக, பிரியாணி செய்ய பாசுமதி அரிசியைப் பயன்படுத்துவார்கள். பிரியாணி என்னும் சொல் வறுத்த என்ற பொருள் தரும்.

சரி பிரியாணியின் வரலாறு, ஹிஸ்டரி எல்லாம் இருக்கட்டும். உங்கள் ஃபேவரைட் எது? சீரக சம்பாவா இல்லை பாஸ்மதி அரிசியா. ஆனா நாம இங்க செய்ய போறது ராய கோலா பிரியாணி..
தேவையானவை:

பாசுமதி அரிசி - 2 கப்,

பெரிய வெங்காயம் - 2,

தக்காளி - 3,

பச்சை மிளகாய் - 2,

இஞ்சி + பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்,

மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், 

புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி,

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

தயிர் - அரை கப்,

தேங்காய்ப்பால் - ஒரு கப்,

உப்பு - தேவையான அளவு. 
தாளிக்க: 

பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,

நெய் - 2 டேபிள்ஸ்பூன்,

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

கோளா செய்ய:
புடலங்காய் (அல்லது) பீன்ஸ் (அல்லது) கோஸ் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப்,

பொட்டுக்கடலை - அரை கப்,

மல்லித்தழை - சிறிதளவு,

எண்னெய் - தேவையான அளவு,

உப்பு - தேவையான அளவு.

அரைக்க:

சின்ன வெங்காயம் - 4,

பூண்டு - 4 பல்,

பச்சை மிளகாய் - 1,

காய்ந்த மிளகாய் - 1,

இஞ்சி - ஒரு சிறிய துண்டு,

சோம்பு - அரை டீஸ்பூன்,

பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1.
செய்முறை:
ராய கோலா பிரியாணி செய்வது எப்படி?
(கோளா செய்ய) புடலங்காய் அல்லது கோஸ் என்றால் சிறிது உப்புப் போட்டுப் பிசறி, அரை மணி நேரம் வையுங்கள். பீன்ஸ் என்றால் ஒரு கொதிக்கு வேக விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். 
நீரை ஒட்ட பிழிந்து விட்டு, காயை எடுத்துக் கொண்டு, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை காயுடன் சேர்த்து அரைத்தெடுங்கள். 

பொட்டுக் கடலையைப் பொடித்து அரைத்ததுடன் சேர்த்து, உப்பு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டை களாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். இது தான் கோளா உருண்டை.

பிரியாணி செய்ய:

அரிசியைக் கழுவி ஊற வையுங்கள். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்குங்கள். எண்ணெய், நெய்யைக் காய வைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேருங்கள். 
வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி, இஞ்சி + பூண்டு விழுது, மிளகாய் தூள், பச்சை மிளகாய், புதினா, மல்லி சேர்த்து நன்கு வதக்குங்கள். 

அத்துடன் தயிரையும் சேர்த்து, ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு, தேங்காய்ப் பால் ஒரு கப், தண்ணீர் 2 கப் சேருங்கள்.

ஊற வைத்த அரிசியை, தண்ணீரை வடித்து விட்டு, தேவையான உப்பு சேர்த்து, கிளறி மூடுங்கள். ஒரு விசில் வந்ததும், தீயைக் குறைத்து, ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள்.
லிப்ஸ்டிக்கினால் மூளை பாதிப்பு ஏற்படுகிறது?
பிரஷர் போனதும் மூடியைத் திறந்து, கோளா உருண்டை களை சேர்த்துக் கிளறி மூடுங்கள். இந்த பிரியாணி செம்ம்ம்ம்ம்ம்ம்ம்மயா.... கமென்ட்டில் குறிப்பிடுங்களேன். 
Tags: