Flash News

மல்டி பொடி இட்லி செய்முறை | Multi Podi Idli !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
தேவையானவை :

மினி இட்லி - தேவையான அளவு,

மிளகுத்தூள், எள் பொடி தலா - 1 டீஸ்பூன்,

இட்லி மிளகாய் பொடி - 1 டேபிள்ஸ்பூன்,

நல்லெண்ணெய் - சிறிது,

உப்பு - ருசிக்கு,

கறிவேப்பிலை பொடி - 1 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க...

கடுகு - 1 டீஸ்பூன்,

கறிவேப்பிலை, கஸ்தூரி மேத்தி (காய்ந்த வெந்தய கீரை) - சிறிது,

நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

மல்டி பொடி இட்லி
செய்முறை :

இட்லி மிளகாய் பொடியில் நல்லெண்ணெய் கலந்து 5 இட்லிகளில் மேல், கீழ் பகுதிகளில் தடவவும். 

வறுத்த எள் பொடி, மிளகுத் தூள், நல்லெண்ணெய் விட்டு மீதி 5 இட்லியை புரட்டவும். கறிவேப்பிலை பொடியில் எண்ணெய் ஊற்றி மீதமுள்ள இட்லியை புரட்டி வைக்கவும். 

ஒவ்வொரு வகை இட்லியையும் (மொத்தம் 3 வரும்) மூன்று மூன்றாக அடுக்கி டூத்பிக் அல்லது ஐஸ் குச்சியில் குத்தவும். 

கடாயில் நெய் விட்டு தாளிக்கும் பொருளை தாளித்து அடுக்கி வைத்துள்ள மல்டி கலர் இட்லி மீது கொட்டி பரிமாறவும். 

மணமும் சுவையும் கொண்ட அபாரமான இட்லி இது!

No comments

Copyright © 2016 www.esamayal.com. All rights reserved
close