சுவையான டபுள் பீன்ஸ் புலாவ் செய்வது எப்படி?





சுவையான டபுள் பீன்ஸ் புலாவ் செய்வது எப்படி?

காய்கறிகள் அனைத்துமே உடல் நலத்திற்கு மிகவும் அவசியமான ஒரு உணவு வகையாக இருக்கிறது. 
சுவையான டபுள் பீன்ஸ் புலாவ் செய்வது எப்படி?

அன்றாடம் உணவாக பயன்படுத்தும் காய்கறிகளில் மிகவும் விலை மலிவானதும், அதே நேரம் உடலுக்கு பல சத்துக்களை தர வல்ல ஒரு காய் வகையாக பீன்ஸ் இருக்கிறது. 

பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய பீன்ஸ் காய்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும். 
நார்ச்சத்து அதிகம் உள்ள பீன்ஸ் காய்களை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும். 

பீன்ஸ் காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது. 

சரி, இனி பீன்ஸ் பயன்படுத்தி சுவையான டபுள் பீன்ஸ் புலாவ் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருள் :

சம்பா கோதுமை ரவை - 1 கப்,

டபுள் பீன்ஸ் - 100 கிராம்,

வெங்காயம் - 2,

தக்காளி - 1,

பச்சை மிளகாய் - 2,

பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1,

தயிர் - 1 டேபிள்ஸ்பூன்,

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,

மல்லி, புதினா - 10 கிராம்,

இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை :
சுவையான டபுள் பீன்ஸ் புலாவ் செய்வது எப்படி?

முதலில் கோதுமை ரவையை வறுத்துக் கொள்ளவும். பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து கொள்ளவும்.  

பிறகு வெங்காயம், தக்காளி, மிளகாய்தூள், பச்சை மிளகாய், ஏலக்காய், தயிர், மல்லி, உப்பு, புதினா, இஞ்சி-பூண்டு விழுது அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறி விட்டு கொள்ளவும். 

பிறகு டபுள் பீன்ஸ், ரவை சேர்த்து ஒன்றுக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடம் வேக வைத்து பரிமாறவும்.

Tags: