தென்னிந்தியாவில் பயிரிடப்படும் தாவரம் அவரைக்காய் | Broadbeans cultivated plant in southern Indi a





தென்னிந்தியாவில் பயிரிடப்படும் தாவரம் அவரைக்காய் | Broadbeans cultivated plant in southern Indi a

அவரைக்காய் பற்றி நூற்றாண்டு களுக்கு முன்பே தேரையர் குணபாடத்தில் கூறப் பட்டுள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால 
தாவரம் அவரைக்காய்

சூழ்நிலைக் கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிட வேண்டும். அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

* அவரைக்காய் தென்னிந்தியா வில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் தாவரமாகும். 


வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது

* அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப் படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. 

எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். 

இதில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.

* அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலுப்பெறும்


* நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக் காயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். 

இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவு படுத்தும்.

* பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண் பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும்.


* அவரைப் பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சி யடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். 

அவரைக் காயை அதிகம் உண்டு வந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.

* அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப் படுத்தும். 


இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் அவரைக் காயை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது

* காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.

* சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக் காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச் சுற்றல், கை, கால் மரத்துப் போதல் போன்றவை கட்டுப்படும்.

* மலச் சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் 

அவரைக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்.


* முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப் படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

* சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக் காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும். 

முற்றிய அவரைக் காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

அதற்குப் பதிலாக முற்றிய அவரைக் காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து 

சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினை வாற்றலைத் தூண்டும்.
Tags: