கிட்ஸ் பனானா டோஸ்ட் செய்வது எப்படி?





கிட்ஸ் பனானா டோஸ்ட் செய்வது எப்படி?

வாழைப்பழத்தில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வைட்டமின் சி, மூளை ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் பி6, செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும். 
கிட்ஸ் பனானா டோஸ்ட் செய்வது எப்படி?
டயட்ரி ஃபைபர், ரத்த அழுத்தத்தை சீராக்க மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் இந்த பழத்தில் நிறைந்துள்ளன. 

வாழைப்பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம் உடற்பயிற்சிக்கு பிறகு தசைகளை மீட்டெடுக்க உதவுகிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு வாழைப் பழங்களை உட்கொள்வது உங்கள் தசைகளை வலுப்படுத்த உதவும். 

மேலும் அதிக வேலை செய்யவும் அனுமதிக்கும். வாழைப்பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம் உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

வாழைப்பழத்தை வாரத்திற்கு ஆறு முறை சாப்பிடுபவர்களை காட்டிலும் சாப்பிடாதவர்களுக்கு சிறுநீரக நோய் வருவதற்கான வாய்ப்பு 50 விழுக்காடு குறைவாக இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தேவையான பொருள்கள் :

வாழைப்பழம் - ஒன்று (பெரியது)

ப்ரெட் ஸ்லைஸ் - 4

ஜாம் - 2 தேக்கரண்டி

பட்டர் - ஒரு தேக்கரண்டி

தேன் - ஒரு தேக்கரண்டி

செய்முறை :
வாழைப் பழத்தை வட்டத் துண்டுகளாக நறுக்கி தேன் ஊற்றிக் கலந்து வைக்கவும். பட்டர் மற்றும் ஜாமை ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

ப்ரெட் துண்டுகளின் மீது பட்டர் ஜாம் கலவையைத் தடவி வைக்கவும். அதன் மேல் வாழைப்பழத் துண்டுகளை (விரும்பியவாறு) அடுக்கி, மற்றொரு ப்ரெட் துண்டை வைத்து மூடிவிடவும்.

பிறகு அதை டோஸ்டர் அல்லது தவாவில் பட்டர் (அ) எண்ணெய் தடவி டோஸ்ட் செய்து எடுக்கவும். ஈஸி & டேஸ்டி கிட்ஸ் பனானா டோஸ்ட் ரெடி.
Tags: