பயறு வடை செய்யும் முறை !





பயறு வடை செய்யும் முறை !

தேவையான பொருள்கள் :
பச்சைப்பயறு - ஒரு கப்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 3 பல்

கறிவேப்பிலை - 2 இணுக்கு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க

செய்முறை :

பச்சைப் பயறை சுத்தம் செய்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பயறில் தண்ணீரை வடித்து விட்டு பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
பயறு வடை

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி அரைத்த கலவையுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
ஆண்களால் பால் கொடுக்க முடியுமா? மார்பகங்களை பற்றி உண்மைகள் !
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுக்கவும்.

மாலை நேரத்தில் டீயுடன் சூடாகப் பரிமாற சுவையான, சத்தான பயறு வடை தயார்.
Tags: