வெஜிடபிள் மக்கன்வாலா செய்முறை !





வெஜிடபிள் மக்கன்வாலா செய்முறை !

தேவையான பொருட்கள்: 

வாழைக்காய் – 2கப் 

காலிஃப்ளவர் – 2கப் 

பட்டாணி – 2கப் 

ஃப்ரெஞ்சு பீன்ஸ் – 2கப்

தக்காளி – மூன்று 

தக்காளி விழுது – இரண்டு மேஜைக் கரண்டி 

தேங்காய் பால் – அரை கப் 

கார்ன்ஃப்ளவர் மாவு – இரண்டு தேக்கரண்டி 

முந்திரி விழுது – இரண்டு மேஜைக் கரண்டி 

நசுக்கிய மிளகு ஐந்து லவங்கம் – இரண்டு 

ஏலக்காய் – இரண்டு காய்ந்த 

மிளகாய் – மூன்று 

வெண்ணெய் – ஒரு மேஜைக் கரண்டி 

உப்பு – தேவையான அளவு

செய்முறை: 

தக்காளியை வெந்நீரில் போட்டு தோலுரித்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் போட்டு உருகியதும் மிளகு, 
வெஜிடபிள் மக்கன்வாலா

லவங்கம், ஏலக்காய் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் தக்காளியை சேர்த்துக் கரையும் வரை வதக்கவும். 

இதற்கிடையில் காய்கறிகளை தேவையான நீர் சேர்த்து வேக வைக்கவும்.

வதக்கிய தக்காளியுடன் அரைத்த தக்காளி விழுது, வேகவைத்த காய்கறிகளை சேர்க்கவும். 

இத்துடன் கார்ன்ஃபிளவர் மாவை தேங்காய் பாலில் கரைத்து சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 

பிறகு முந்திரி விழுதை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விடவும்.

இதை சப்பாத்தி, பிரெட்டுடன் சாப்பிட ஜோராக இருக்கும்.
Tags: