கடலை கறி செய்முறை !





கடலை கறி செய்முறை !

நம் பலரின் வீட்டில் எளிதில் தயாரிக்க முடிந்த உணவு. இந்த கடலை கறியின் சுவையே தனிதான்! இவை தயாரிக்கும் முறையை இங்கே காண்போம்..

கடலை கறி

தேவையான பொருட்கள்: 

கொண்டைக்கடலை – 150 கிராம் 
மிளகாய் தூள் – 1 ஸ்பூன் 

தனியா தூள் – 2 ஸ்பூன் 

இஞ்சி விழுது – 1 ஸ்பூன் 

தேங்காய் பால் – 1 கப் 

தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன் 

கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க 

உப்பு – தேவையான அளவு 

செய்முறை: 

கொண்டைக்கடலையை முதல் நாளே ஊற வைத்திடுங்கள். அதை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 
சிறிய வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி விழுதை சேர்த்து வதக்கி எடுத்துக் கொண்டு,

இன்னொரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, 

மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின்னர் கடலையை சேர்த்து கிளறி
அதில் வதக்கிய இஞ்சி விழுது, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். 
இறக்கப்போகும் நேரத்தில் தேங்காய் பாலை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

இந்த கறி புட்டுக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
Tags: