ஸ்டஃப்டு டொமேட்டோ செய்முறை !





ஸ்டஃப்டு டொமேட்டோ செய்முறை !

நம் உணவில் ஒரு அத்தியாவசிய பொருளாக இருப்பது தக்காளி. ஆனால் அதையே சைட் டிஷ் ஆக உட்கொள்வதில் ஒரு தனி சுவை உண்டு. 
ஸ்டஃப்டு டொமேட்டோ
இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டஃப்டு டொமேட்டோவை ட்ரை பண்ணி பாருங்க… மிக சுவையான சைட் டிஷ் இது. 

தேவையானவை: 

ஆப்பிள் தக்காளி – 4 

இஞ்சி – ஒரு பெரிய துண்டு 

ஓமம் – ஒரு ஸ்பூன் 

மல்லித்தழை – ஒரு கைப்பிடி 

மிளகு சீரகத் தூள் – தலா ஒரு ஸ்பூன் 

எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை: 

ஆப்பிள் தக்காளியை நான்காக வகுந்து கீறிக் கொள்ள வேண்டும். தக்காளி பிளந்து விட கூடாது. நான்கு பாகமும் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும். 

இஞ்சி, ஓமம், மல்லித்தழை, மிளகு மற்றும் சீரகம் எல்லாவற்றையும் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

ஒவ்வொரு தக்காளிக்குள்ளும் அரைத்த மசாலாவை நிரப்பவும் (ஸ்டஃப் செய்யவும்). 

நிரப்பப்பட்ட தக்காளிகளை வாணலியில் போட்டு எண்ணெய் விட்டு வெந்தவுடன் எடுக்கவும்.

சூடாக சாப்பிட உகந்த மிகமிக சுவையான சைட் டிஷ் இது.
Tags: