சுவையான காரைக்குடி நண்டு மசாலா செய்வது எப்படி?





சுவையான காரைக்குடி நண்டு மசாலா செய்வது எப்படி?

அணுக்கள் சேதமடையாமல் பார்த்துக் கொள்வதோடு செக்ஸ் ஆர்கன்களைத் தூண்டி, உடலை வெப்பமேற்றி, செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டிவிடும் தன்மையும் இதற்கு உண்டு. 
சுவையான காரைக்குடி நண்டு மசாலா செய்வது எப்படி?
நண்டுகள் எப்போதுமே, உடல் உஷ்ணத்தைத் தூண்டிவிடும் என்பதால் தான், மழைக் காலங்களில் நண்டு அதிகம் சாப்பிட சொல்வார்கள். 

சூப் வைத்து, மிளகு சேர்த்து சாப்பிடும் போது, சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது. 

நண்டுகளை சாப்பிடுவதன் மூலம் மனிதர்களின் நடவடிக்கையில் மாறுபாடுகள் ஏற்படும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். 

நண்டுவில் நிறைய செலீனியம் உள்ளது.. நம்முடைய உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதத்தினை தடுக்க இந்த செலீனியம் சத்துக்கள் உதவுகின்றன. 

செலீனியம், தைராய்டு சுரப்பிகளின் ஆக்சிஜனேற்ற சேதங்களை தடுப்பதன் மூலம், அவற்றின் சீரான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இதன்மூலம் தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கும் தூண்டுகோலாகிறது.

நண்டு மசாலா ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமாக சமைக்கப்படும். ஆனால் காரைக்குடி நண்டு மசாலாவின் ஸ்பெஷல் என்ன வென்றால், அதில் புளி மற்றும் முந்திரி சேர்த்து அரைத்த மசாலாவை கலந்து சமைப்பது தான். 
இதனால் இந்த நண்டு மசாலா மிகவும் வித்தியாச மான சுவையில் இருக்கும். மேலும் இந்த காரைக்குடி நண்டு மசாலாவை சாதம் மட்டுமின்றி, தோசை, இட்லி, சப்பாத்தி போன்றவற்றுடனும் சாப்பிடலாம்.  

சரி இனி நண்டு கொண்டு சுவையான காரைக்குடி நண்டு மசாலா செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: 

நண்டு - 1 கிலோ 

புளிக்கரைசல் - 1 கப் 

பட்டை - 2 

பிரியாணி இலை -2 

சோம்பு - 1/2 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 

மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன் 

வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது) 

தக்காளி - 2 (நறுக்கியது) 

பச்சை மிளகாய் - 2 

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
மசாலாவிற்கு... 
துருவிய தேங்காய் - 1 கப் 

மிளகு - 1 டீஸ்பூன் 

சீரகம் - 1 டீஸ்பூன் 

கசகசா - 1 டேபிள் ஸ்பூன் 

சோம்பு - 1/2 டீஸ்பூன் 

முந்திரி - 3 

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
செய்முறை: 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, குளிர வைத்து,

மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். 

அடுத்து நண்டு சேர்த்து, பின் மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் நன்கு வதக்க வேண்டும். பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

இந்நிலையில் நண்டு ஓரளவு வெந்திருக்கும். பின்பு அதில் புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து,

அலங்காரத்தை விரும்பும் ஆண்களுக்கான ரகசியங்கள் !

நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், காரைக்குடி நண்டு மசாலா ரெடி!
Tags: