ஸ்பெஷல் பால் அல்வா செய்வது எப்படி?





ஸ்பெஷல் பால் அல்வா செய்வது எப்படி?

பால் என்பது கால்சியம் நிறைந்த, உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுகிறது. உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது. 
ஸ்பெஷல் பால் அல்வா செய்வது எப்படி?
மேலும் பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு உறுதியும் அளிக்கிறது. நாட்டு பசுக்களின் பாலில் உடல் வலிமை தரும் வகையிலான புரதம் உள்ளது. 

ஸ்கிம்டு பாலில் உள்ள கொழுப்பு முழுவதுமாக நீக்கப்பட்டு 0.1 சதவீத கொழுப்பு மட்டுமே மீதம் இருக்கும். 

இதனால் ஸ்கிம்டு பாலில் உள்ள கால்சியம், வைட்டமின் பி-2, பி-12, பாஸ்பரஸ் உள்ளிட்டவை மட்டும் உடலில் சேரும். பொதுவாக உடற்பருமனைக் குறைக்க ஜிம் பயிற்சி செய்வோர் ஸ்கிம்டு மில்க் சாப்பிடுவர். 

இது ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். எலும்புகள் வலுப்பெற உதவும். உடல் மெலிந்தவர்கள் தசைகளுக்கு புரதம் கிடைக்கவும் தசைகளை வலுப்படுத்தவும் ஸ்கிம்டு மில்க் சாப்பிடலாம். 

இன்று ஸ்கிம்டு மில்க் சந்தை பெரிதாகிவருவதை அடுத்து சூப்பர் மார்கெட்களில் ஸ்கிம்டு மில்க் வியாபாரம் களைகட்டி வருகிறது. ஸ்கிம்டு மில்க் பாக்கெட்கள் விலையும் அதிகரித்து வருகிறது. 

ஆனால் இவற்றுள் தரமான ஸ்கிம்டு மில்கை தேர்வு செய்து வாங்குவது சிறந்தது.பால் என்றாலே முக்கியமானது தான். அதிலும் அந்த பாலில் செய்யப்படும் அல்வா..? இன்னும் ஸ்பெஷல் தானே. 

ஆமாங்க.  இந்த பால் அல்வா தரம் வாய்ந்த நல்ல சுத்தமான பாலில் இருந்து தயாரிக்கப் படுகிறது. பால் கோவா எல்லாருக்கும் பிடிக்கும். அதிலும், பால் அல்வா.. சொல்லவா வேண்டும்..? 
ஸ்வீட் டப்பாவ ஓபன் பண்ணா குழந்தைகள் முதல்ல எடுக்குறது இந்த பால் அல்வா தான்.  பால் அல்வா எப்படி செய்யலாம், அதற்கு என்னென்ன தேவை என்று இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 

பால் : 2 கப் 

சர்க்கரை : 1 கப் 

நெய் : 1/2 கப் 

ரவை : 1/4 கப் 

முந்திரி பருப்பு : 5 

ஏலக்காய் பவுடர் : 1/4 ஸ்பூன்

செய்முறை :
முதலில் முந்திரி பருப்பை நெய்யில் வதக்கவும். ரவையை பாலில் போட்டு நல்ல கனமான பாத்திரத்தில் கிண்ட வேண்டும். 

இதனுடன் எடுத்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு மாதிரியான கெட்டிப் பதத்திற்க்கு வரும் பொழுது அடுப்பினை சிம்மில் வைக்க வேண்டும்.

ஏலக்காய் பௌடரை இணைத்து கொள்ள வேண்டும். எல்லாம் முடிந்தவுடன் ஒரு கெட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பி லிருந்து பாத்திரத்தை இறக்கி வைக்கவும். தற்போது பால் அல்வா உண்ண தயார் நிலையில் உள்ளது.
Tags: