ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் செய்முறை !





ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் செய்முறை !

தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி - 1 கப்,

பால் - 1/4 கப்,

கன்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்,

ஃப்ரெஷ் க்ரீம் - 1 கப்,

லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன்,

சர்க்கரை - 1/4 கப்,

உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும். ஒரு வைப்பரால் சாஃப்டான க்ரீம் ஆகும் வரை நன்கு அடிக்கவும்.

மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி பழத்தைப் போட்டு 3/4 பல்ப் (கூழ்) பதத்துக்கு அடிக்கவும்.
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்
பிறகு ஃப்ரெஷ் க்ரீம் கலவை, கன்டென்ஸ்டு மில்க், லெமன் ஜூஸ், பால், சர்க்கரை மற்றும் ஸ்ட்ராபெர்ரி பல்ப் அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கவும்.

உப்பு சேர்க்கவும். அதை ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும்.

பிறகு எடுத்து ஸ்பூனால் நன்கு கலக்கவும். இதை 7-8 மணி நேரம் ஃப்ரீசரில் மறுபடியும் வைக்கவும். பின் பரிமாறவும்.
Tags: