உங்களுக்கான சமையல் குறிப்புகள் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
வெங்காய அடை செய்யும் போது : - 

வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால்,

கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.

வெண்டைக்காய் சமைக்கும்போது : - 

வெண்டைக்காய் சமைக்கும் போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

அரிசி உப்புமா செய்யும்போது : - 

அரிசி உப்புமா செய்யும் போது அதில் கொஞ்சம் வேக வைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம்.

காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.

குழம்பில் தேங்காய் பயன்படுத்தும்போது : - 

தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும்.
அதை நீக்க வேண்டு மானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள்.

மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கி விட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.

கீரையை வேகவிடும்போது : - 

கீரையை வேகவிடும் போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

பாகற்காய் கெடாமல் இருக்க : - 

பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி - தேவையான அளவு

எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும்.

தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

தயிர் புளிக்காமல் இருக்க : - 

தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.

மோர் மிளகாய் தயாரிக்கும்போது : - 

மோர் மிளகாய் தயாரிக்கும் போது அத்துடன் பாகற்காய் களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்க லாம்.

பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.

முட்டையை வேக வைக்கும் போது : - 

முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீ‌ஸ்பூன் வினிகரை விடவும்.
அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.

பாலை காய்ச்சுவதற்கு முன் : - 

பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பத்திரத்தில் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.

பால் புளிக்காமல் இருப்பதற்கு : - 

பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.

உருளைக்கிழங்கு கெடாமல் இருக்க: - 

தோல் உரித்த உருளைக் கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை‌த் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.

எண்ணெய் கறையை அழிக்க : - 

எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.
உங்களுக்கான சமையல் குறிப்புகள் ! உங்களுக்கான சமையல் குறிப்புகள் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on July 20, 2015 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚