சுவையான ஓட்ஸ் பணியாரம் செய்வது எப்படி?





சுவையான ஓட்ஸ் பணியாரம் செய்வது எப்படி?

ஓட்ஸில் கொழுப்பு மற்றும் உப்பு குறைந்த அளவிலே உள்ளது. இயற்கையாகவே இதில் இரும்பு சத்தும், சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளதால், இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது.
சுவையான ஓட்ஸ் பணியாரம் செய்வது எப்படி?
ரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. 

அதிக கரையக்கூடிய நார்பொருள், வயிறு/குடல் செயல்களை ஒழுங்கு செய்து மலச்சிக்கலை தீர்க்கிறது.  

உணவில் அதிக அளவு ஓட்ஸை சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நிலையாக இருக்கும், நரம்பு சம்மந்தமான கோளாறுகள் ஏற்படாது. 

சுவையான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் செய்வது எப்படி?

சரி இனி ஓட்ஸ் கொண்டு சுவையான ஓட்ஸ் பணியாரம் செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையானவை:

ஓட்ஸ்- 1 டம்ளர்

பச்சரிசி மாவு- 1 டம்ளர்

ரவை- 1/4 கப்

தயிர்- 1/2 கப்

உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி

கடுகு- 1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு- 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 2

இஞ்சி, பூண்டு விழுது- 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை- 1/2 இணுக்கு

காயம்- சிறிதளவு

சுவையான ஓட்ஸ் பணியாரம் செய்வது எப்படி?
ஓட்ஸையும் ரவையையும் தனித்தனியே வறுக்கவும், பிறகு ஒன்றாகத் திரிக்கவும். அரைத்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி அரிசி மாவையும் சேர்க்கவும்.

இவற்றுடன் தயிர், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு வெங்காயத்தையும் நன்றாக வதக்கவும்.
வதக்கின பொருட்களை ஓட்ஸ் கலவையுடன் சேர்த்து அடுப்பை ஏற்றி மிதமான தீயில் ஓரிரு நிமிடங்கள் பச்சை வாடப் போக வதக்கவும்.

குழிப்பணியாரச் சட்டியில் எண்ணெய் விட்டு ஓட்ஸ் மாவை ஒவ்வொரு குழியிலும் விடவும்.

வெந்த பிறகு திருப்பிப் போடவும். சுவையான ஓட்ஸ் பணியாரம் தயார். மிளகாய்ப் பொடி, சட்னி சிறந்த இணையுணவு.
Tags: