சுவைமிக்க மட்டன் மல்லிக்கறி செய்வது எப்படி?





சுவைமிக்க மட்டன் மல்லிக்கறி செய்வது எப்படி?

கொத்தமல்லி அல்லது தனியா இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. இந்த மசாலாப்பொருள் இல்லாமல் எந்த சமையலறையையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. 
சுவைமிக்க மட்டன் மல்லிக்கறி செய்வது எப்படி?
இது ஒரு தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ளது, இது ஒவ்வொரு உணவையும் மகிழ்விக்கும். மேலும், இது சுவை அளிப்பதோடு, மருத்துவ குணங்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

கொரோனா வழிகாட்டுதல்களில், ஆயுஷ் அமைச்சகம் கொத்தமல்லியை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்வது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

கொத்த மல்லியில் வைட்டமின் கே, சி மற்றும் ஏ போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் தலைமுடியின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. 
கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது முடி உதிர்வை எதிர்த்துப் போராட உதவும். கொத்தமல்லி முகப்பரு, தோல் நிறமி மற்றும் தழும்புகளை குறைக்கிறது. கொத்தமல்லியில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. 

மேலும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. காலையில் கொத்தமல்லித் தண்ணீரைக் குடிப்பதால் முழுமையான ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.
தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கறி – ½ கிலோ

சின்ன வெங்காயம் – 50 கிராம்

பச்சை மிளகாய் – 10

இஞ்சி – 2 துண்டு

பூண்டு – 6 பல்

மல்லித் தழை – சிறிது

மல்லித் தூள் – 2 தேக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

பட்டை – 3

பிரிஞ்சி இலை – 1

உப்பு – தேவையான அளவு

உளுந்தம் பருப்பு – ½ தேக்கரண்டி

அரைக்க:

தேங்காய் – 1 கோப்பை

சோம்பு – 2 தேக்கரண்டி

கசகசா – 2 தேக்கரண்டி

முந்திரி பருப்பு – 2 தேக்கரண்டி
செய்முறை:

ஆட்டுக் கறியை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அரைப்பதற் காக கொடுக்கப்பட்ட பொருட்களை அரவை இயந்திரத்தில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, பிரிஞ்சி இலை, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும்.
ஆட்டின் கொழுப்பை சாப்பிட்டால்
வெங்காயம் வதங்கியதும் ஆட்டுக்கறியை சேர்த்து நன்கு வதக்கவும். பின் சிறிது மல்லித் தூள் மற்றும் தண்ணீர் சேர்க்கவும் முக்கால் பதத்திற்கு வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து வேக விடவும். 

வெந்ததும் மல்லித் தழை சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான மல்லிக்கறி உண்ண ருசியாக இருக்கும்.
Tags: