நாம் சமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள் !





நாம் சமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள் !

வேப்பம்பூ : வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சூடான சாதத்தில் பிசைந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் நுழைவுத் தேர்வு, 
நாம் சமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள் !
தேர்வு ஜுரம், கல்லூரி சேர்க்கை ஜுரம், நாளை பள்ளி திறக்கிறதே என்ற ஜுரம் எல்லாம் பறந்து போகும்.

காளான் சமைக்க : - 

காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக் கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றி விடும்.
உப்பு அதிகமாகி விட்டதா? : 

சாம்பார் உள்ளிட்ட குழம்பு வகைகளில் உப்பு அல்லது காரம் அதிகமாகி விட்டதா? கவலை வேண்டாம்.

ஒரு தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நறுக்கிப் போட்டுக் கொதிக்க வையுங்கள். உப்பு அல்லது காரம் சரியாகி விடும்.

ரவா லட்டு செய்யும் போது : 

ரவா லட்டு செய்யும் போது அத்துடன் அவலையும் பொடித்து, நெய்யில் வறுத்துச் சேர்த்து 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து தயாரித்தால், ரவா லட்டின் சுவை மேலும் கூடும்.

தக்காளி சூப் தயாரிக்கும் போது : 
நாம் சமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள் !
வீட்டில் தக்காளி சூப் தயாரிக்கும் உங்களுக்குத் தான் இந்த டிப்ஸ். சூப் தயாரிக்கும் போது வேக வைத்த பீட்ரூட் துண்டை அதில் போட்டு விட்டால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சுவையாகவும் இருக்கும்.
கத்தரிக்காய் வாடாமல் இருக்க : -  

கடையில் பிரெஷ் ஆக வாங்கி வைத்த கத்தரிக்காய் வாடி வதங்கி விடுகிறதா? கத்தரிக்காயை ஹாட் பாக்ஸில் வைத்து மூடினால் காய் வாடாமல், நிறம் மாறாமல் இருக்கும்.
Tags: