செட்டிநாடு நண்டு சூப் செய்வது எப்படி?





செட்டிநாடு நண்டு சூப் செய்வது எப்படி?

நண்டில் உள்ள புரோட்டீன் ஒருவரின் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. 
செட்டிநாடு நண்டு சூப் செய்வது எப்படி?
மேலும் நண்டு சாப்பிட்டால், முடி, நகம், சருமம் போன்றவையும் ஆரோக்கியமாக இருக்கும். காப்பர் மற்றும் ஜிங்க் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. 
ஏனெனில் இவை இரண்டும் தான் உடலானது வைட்டமின் டி-யை உறிஞ்சி, அதனால் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவும். முகப்பருக்கள் இருந்தால், நண்டுகளை சாப்பிடுங்கள். 

ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். இதனால் முகப்பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படும். இத்தனை வளம்மிக்க நண்டை கொண்டு செட்டிநாடு நண்டு சூப் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: 

நண்டு – அரை கிலோ

வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி

எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 2

பூண்டு – 4 பல்

இஞ்சி – 1 துண்டு

மிளகுத்தூள் – கால் தேக்கரண்டி

வெங்காயத் தாள் – 3

கான்ஃப்ளார் – ஒன்றரை தேக்கரண்டி

பால் – கால் கப்
செய்முறை: 
செட்டிநாடு நண்டு சூப் செய்வது எப்படி?
நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத் தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

வெங்காயத் தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்க வேண்டும். பாலில் கான்ஃப்ளாரை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 
வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு, கான்ஃப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு 
ஒரு கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி, நறுக்கிய வெங்காயத் தாள் தூவி பரிமாற வேண்டும்.
Tags: