ஓட்ஸ் இட்லி செய்வது | Oats Idli !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையான பொருட்கள்: 

ஓட்ஸ் – 2 கிண்ணம்

தயிர் – 1/2 கிண்ணம்

உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி

கடுகு- 1/2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு- 1/4 தேக்கரண்டி

வெள்ளை உளுத்தம்பருப்பு- 1/4 தேக்கரண்டி

பச்சைமிளகாய்- 2

துருவிய கேரட்- 1 கிண்ணம்

கொத்தமல்லி

செய்முறை: 

1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸைப் போட்டு, பொன்னிறமாக வறுத்து, பின் மின்னரைப்பானில் பொடி செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஓட்ஸ் இட்லி
2. பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கேரட் சேர்த்து வதக்கி, 1 நிமிடம் கிளறி இறக்கி, அதனைப் பொடி செய்த ஓட்ஸுடன் சேர்க்க வேண்டும்.

3. பிறகு அதில் தயிர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்குக் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமாக இதில் தண்ணீரை சேர்க்கக்கூடாது. உடனடியாக இட்லிகளாக வார்க்காமல் ஒரு மணி நேரம் வெளியே வைக்கவும்.

4. பின்னர் அந்த மாவை இட்லித்தட்டுகளில் எண்ணெய் தடவி இட்லிகளாக ஊற்றி எடுத்தால், சுவையான ஆரோக்கியமான ஓட்ஸ் இட்லி தயார்.
தொட்டுக்கொள்ள சட்னி, துவையல், சாம்பார், மிளகாய்ப்பொடி அருமையாக இருக்கும்.
ஓட்ஸ் இட்லி செய்வது | Oats Idli ! ஓட்ஸ் இட்லி செய்வது | Oats Idli ! Reviewed by Fakrudeen Ali Ahamed on July 20, 2015 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚