சுவையான மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வது எப்படி?





சுவையான மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வது எப்படி?

நாக்கு சுவையின்மை, வாந்தி உணர்வு ஆகியவற்றை போக்கும் தன்மை மணத்தக்காளி வத்தலுக்கு உள்ளது. 
சுவையான மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வது எப்படி?
எனவே கர்ப்பிணி பெண்கள் குறைந்த அளவில், தினமும் இந்த வத்தலை உணவுடன் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வரலாம். 

மார்பு சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணத்தக்காளி வத்தல் பயன்படுகிறது. அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். 

வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு.  
மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால்  நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும். 

சரி இனி மணத்தக்காளி வற்றல் கொண்டு சுவையான மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையான பொருட்கள்: 

பசுமையாக செடியில் இருந்து பறித்த காய்கள் - 50 கிராம்

(அல்லது) உப்பு போட்டு உலர்த்திய வற்றலாகவும் இருக்கலாம் - 50 கிராம்

புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு.

நல்லெண்ணெய் - 100 மில்லி

சாம்பார் பொடி - 4 டீஸ் பூன்

கடுகு - 1 ஸ்பூன்

வெந்தயம் - 1 ஸ்பூன்

துவரம் பருப்பு - 1 ஸ்பூன்

பெருங்காயம் பவுடர் - 1/4 டீஸ் பூன்

வெல்லம் - 1 டீஸ் பூன்

அரிசி மாவு - 2 டீஸ் பூன்

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

மிளகாய் வற்றல் - இரண்டு

உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: 
சுவையான மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வது எப்படி?
வாணலியில் எண்ணெயை விட்டு முதலில் பெருங்காயத் தூளை போட்டு பின் கடுகைப் போட வேண்டும். 

கடுகு வெடித்ததும் மிளகாய் வற்றலை இரண்டாகக் கிள்ளிப் போட்டு பின்பு வெந்தயம், மணத்தக்காளிக் காயையோ அல்லது வற்றலையோ போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி தாளித்த பொருட்களோடு ஊற்ற வேண்டும். 

அதனுடன் சாம்பாபர் பொடி, தேவைக்கான உப்பு சேர்த்துப் பொடி வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்து சற்று அளவு குறைந்ததும் வெல்லத் தூளை போட வேண்டும்.
பின் கறிவேப் பிலையை கிள்ளி போட்டு அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஊற்ற வேண்டும். குழம்பு நல்ல பரிமாறும் பதத்திற்கு வரும்.

சூடான சாதத்தில் குழம்பு ஊற்றி நல்லெண்ணெய், நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இதைத் தான் முத்து வத்தல் குழம்பும் சுட்ட அப்பளமும் என்று சொல்லுவார்கள்.
Tags: