"எஸ்ப்ரஸோ" பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை !

Subscribe Via Email

"காபியில் என்ன இருக்கு, கொஞ்சம் சர்க்கரை, பால், காபி தூள்.., இதுல போயி என்னத்த முழுசா தெரிஞ்சுக்க இருக்கு..." என்று கூறுபவராக இருந்தால் நீங்க ள் எம்.என்.சி-யில் பணிபுரியா தவராக, 
எஸ்ப்ரஸோ
மாடர்ன் வாழ்க்கை பக்கம் எட்டிப் பார்க்காமல் வெட்டி பகட்டு இன்றி வாழ்பவராக, காதலியைக் கூட்டிக் கொண்டு காபி ஷாப் பக்கம் தலை வைத்தே படுக்காதவராக தான் இருக்க வேண்டும். 

காபியை பற்றிய சில சுவாரஸ்ய ருசீகரமான தகவல்கள்!

ஏனெனில், காபியில் திருவள்ளுவர் பாடிய பா'க்களை விட அதிகமான வகைகள் விற்கப்பட்டு வருகிறது. அதில் மிகவும் பிரபலமான ஒன்று எஸ்ப்ரஸோ. எஸ்ப்ரஸோ பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில விஷயகள் இருக்கின்றன.....

காபி குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

இது கபுசின் துறவிகள் (Capuchin monks) பெயரில் இருந்து வந்தது என்றும் கூறப்படுகிறது. எஸ்ப்ரஸோ, மெஷினின் உதவியோடு நீர் மற்றும் நீராவியால் சூடாக்கப்பட்டு, பிறகு அறைக்கப் படுகிறது.

இதனால் அதன் அடர்த்து மிகவும் நெருக்கமாக ஆக்கப்படுகிறதாம். இது மற்ற காபி வகைகளை விட அடர்த்தியாக கிரீமியாக இருப்பதற்கு இது தான் காரணம். மற்ற வகை காபிக்களோடு ஒப்பிடுகையில் எஸ்ப்ரஸோவில் காப்ஃபைனின் அளவு அதிகமாக இருக்கிறது. 

எனவே, எஸ்ப்ரஸோவை விரும்பி பருகுபவர் கள் அதை குறைந்த அளவில் பருகினால் நல்லது. இல்லையேல் கண்டிப்பாக உடலுக்கு கேடு தான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

ரிஸ்ட்ரேட்டோ என்பது எஸ்ப்ரஸோவி லிருந்து முக்கால்வாசி அவுன்ஸ் அளவு பிரித்தெடுக்கப்படுவது ஆகும். ஆனால், நிறைய பேர் இது தான் சரியான, பக்காவான எஸ்ப்ரஸோ என நம்பி வருகிறார்கள்.
ஒரு ஷாட் எஸ்ப்ரஸோவை 6-8 அவுன்ஸ் பதப்படுத் தப்பட்ட காய்ச்சிய பாலில் நுரைப் போங்க கலந்து குடிப்பது தான் காஃபே லைட்டே (Cafe Latte).

தண்ணீர் கலக்கப்பட்ட எஸ்ப்ரஸோவை, மெஷினில் சூடு செய்து பருகுவது தான் கஃபே அமெரிக்கனோ (Café Americano). ஒரு ஷாட் எஸ்ப்ரஸோவில் 6-8 அவுன்ஸ் நீர் கலந்து பருக வேண்டும்.

கப்புச்சினோ, காபி ஷாப் செல்லும் அனைவரும் விரும்பி பருகும் காபி இது. மிகவும் கிரீமியாக இருக்கும். எஸ்ப்ரஸோவை நன்கு காய்ச்சிய பாலில் கலந்து தயாரிக்கப் படுகிறது.

காதலர்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறுகிறார்கள். (நம்ம ஊர்ல லவ்வர்ஸ் மட்டும் தான'ய்யா காபி ஷாப்கு போறாங்க!)
"எஸ்ப்ரஸோ" பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை ! "எஸ்ப்ரஸோ" பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை ! Reviewed by Fakrudeen Ali Ahamed on July 22, 2015 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close