மணத்தக்காளி இலை பொரித்த குழம்பு செய்வது | Manattakkali fried curry leaf !





மணத்தக்காளி இலை பொரித்த குழம்பு செய்வது | Manattakkali fried curry leaf !

தேவையான பொருள்கள்:

நன்கு ஆய்ந்து நறுக்கிய மணத்தக்காளி இலை -  1 கப்

துவரம்பருப்பு  - 50 கிராம்

கடுகு - 1 டீஸ் பூன்

உளுத்தம் பருப்பு -  2 டீஸ் பூன்

எண்ணெய்   -  4 டீஸ் பூன்

மிளகு   - 1 டீஸ் பூன்

பெருங்காயம்  - 1 சிறுதுண்டு

துருவிய தேங்காய்   -  2 டீஸ் பூன்

மஞ்சள் தூள்   - 1 சிட்டிகை

உப்பு  -  தேவைக்கேற்ப

செய்முறை:

துவரம் பருப்பையும், மணத்தக்காளி கீரையையும் நன்றாகக் கழுவி  குக்கரில் அளவாக தண்ணீர் வைத்து மஞ்சள் தூள் சேர்த்து  மூன்று விசில் சத்தம் வரும் வரை வைத்து வேக வைக்கவும்.  

மணத்தக்காளி இலை பொரித்த குழம்பு

இரண்டு ஸ்பூன் எண்ணையை வாணலியில் விட்டு சூடு படுத்தி அதில் மிளகு, ஒரு டீஸ் பூன் உளுத்தம் பருப்பு பெருங்காயம் போட்டு சிவக்க வறுத்து,

கடைசியில் துருவிய தேங்காயையும் போட்டு ஒருமுறை பிரட்டி எடுக்க வேண்டும்.

வறுத்த சாமான்களை மிக்சியில் நன்றாக அரைத்து வேக வைத்துள்ள பருப்பு கீரை கலவையில் கொட்டி கொதிக்க விட வேண்டும்.

தேவைக் கேற்ப உப்பு போட வேண்டும், எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்து

வரும் பொழுது 1 டீஸ்பூன் அரிசிமாவை 4 ஸ்பூன் தணிணீர் விட்டு கரைத்து கொதிக்கும் குழம்பில் விட வேண்டும். 

எல்லாம் ஒன்று சேர்ந்து குழம்பு பதத்திற்கு வந்ததும் இறக்கி வைத்து கடுகு உளுத்தம் பருப்பை தாளித்துக்  கொட்ட வேண்டும்.

சூடான சாதத்தில் நெய் விட்டு மணத்தக்காளி கீரை பொரித்த குழம்பை பிசைந்து சாப்பிட வேண்டும்.
Tags: