முக்கியமான சமையல் குறிப்புகள் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
காபி, டீ சுவையாக இருக்க : - 

காபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் 

அதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ, டீயோ சுவையாக இருக்காது.

கறிவேப்பிலை சேர்க்கும்போது : - 

சாம்பார், ரசம் இவற்றில் போடும் கறிவேப்பிலை அனேகமாக யாரும் சாப்பிடுவதில்லை, வீணாகித்தான் போகிறது.

இதை தவிர்க்க கறிவேப்பிலையை விழுதாய் அரைத்துக் கலந்து விட்டால் வயிற்றுக்குச் சேரும். கொத்து மல்லியையும் இப்படியே செய்யலாம்.

காய்கறி சத்து வீணாகாமல் இருக்க : - 

காய்கறிகளை நிறைய நீர் வைத்து வேக விடாதீர்கள். காய்கறிகள் வேகவும் நேரமாகும். அவற்றின் சத்துக்களும் வீணாகிவிடும்.

கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் காய்கறிகளைப் போட்டு வேகவிடலாம். அல்லது தண்ணீரைத் திட்டமாக வைத்து வேகவிடலாம்.

அப்பளம் நமத்துப் போகாமல் இருக்க : - 

அப்பளங்கள் பொரித்தவுடன் டப்பாக்களில் அவற்றை அப்படியே போடாமல் பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைத்தால் நமத்துப் போகாமல் இருக்கும்.

இஞ்சி நிறைய இருக்கிறதா : - 

இஞ்சி தேவைக்கு அதிகமாக இருந்தால் அதை மணலில் புதைத்து வைத்து நீர் விட்டு மண்ணை ஈரமாகவே வைத்திருங்கள்.

இஞ்சி பல நாட்கள் வரை காய்ந்து போகாமல் பச்சையாகவே இருக்கும்.

வறுத்த வேர்கடலை : - 

வறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.

வெந்தயப் பொடி : - 

டையாபெடிக்ஸ் (நீரிழிவு நோய்) இருப்பவர்கள் தினமும் வெந்தயப் பொடியை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

தயிர் செய்ய : - 

தயிர் செய்ய வேண்டும். ஆனால் பாலில் போட தயிரோ, மோரோ இல்லை யென்றால் மிளகாய் வற்றலை உடைத்து பாலில் போடவும். அடுத்த நாள் தயிர் ரெடி.

பச்சை மிளகாய் கெடாமல் இருக்க : - 

பச்சை மிளகாயை ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் அதன் காம்பை நீக்கி விட்டால், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

பச்சை மிளகாயை ஃப்ரீஜருக்குள் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

ஒரு நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்து இதை பயன் படுத்தவும். இதே முறையில் தேங்காயையும் வைக்கலாம்.

வெந்தயம் : - 

வெந்தயத்தை தோசை மாவு தோசை மாவு மற்றும் மாவு அரைக்கும் போது சேர்த்து அரைத்தால் தோசையும், வடையும் நன்கு சிவக்கும்.

பருப்பு வேக வைக்க : - 

பருப்பு வேக வைக்கும் போது ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளிப் போடவும் சீக்கிரம் வெந்து விடும்.

ஆம்லெட் செய்ய : - 

வெண்ணெயை முட்டையில் கலந்து நன்றாக கலக்கி ஆம்லெட் செய்தால் ருசியாக இருக்கும்.

குழம்பில் உப்பு கூடினால் : - 

குழம்பில் உப்பு கூடி விட்டால் ‌ சிறு வாழைத் தண்டு அல்லது உருளை சாதத்தை போட்டு கொதித்ததும் எடுத்து விடவும்.

கீரை சமைக்க : - 

கீரையை சமைக்கும் போது சர்க்கரையை சேருங்கள். சத்தும் போகாது. நிறமும் மாறாது.

சூப்பில் உப்பு கூடினால் : - சூப்பில் உப்பு அதிகமாகி விட்டால் உருளைக் கிழங்கை துண்டு களாக்கி போடுங்கள்.

இட்லி சாப்பிட : - 

காலையில் இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு,

பெருங்காயம் தாளித்து உபயோகப் படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.

தட்டை செய்யும்போது : - 

தட்டை செய்கையில் அனைத்தும் ஒரே அளவில் காணப்பட வேண்டு மானால், கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி

அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ஒரே வடிவமாக காணப்படும்.

பூரி சவுத்து போகாமல் இருக்க : - 

பூரி சுட்ட சிறிது நேரத்திலேயே நமத்து போய் தொசையாகி விடாமல் இருக்க வேண்டும் என்றால்,

பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

ப்ரெட் ஸ்லைஸ் செய்ய : - 

பிரட்டை ஸ்லைஸ் செய்யாமல் வாங்கி நீளவாக்கில் வெட்டவும். அதன் மீது வெண்ணெய் அல்லது ஜாம், சாஸ், சட்னி, கடலை, குருமா என

எது வேண்டு மானாலும் தடவி ரோல் பண்ணி வட்டமாகக் கட் பண்ணிக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

வெங்காய அடை செய்ய : - 

சுவையான, மணமான வெங்காய அடை செய்வதற்கு, வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி,

ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை செய்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும்.

கோழிக்கரியில் நாற்றம் போக : - 

கோழிக்கரியில் மஞ்சள் பொடி தூவி நன்கு கிளறி 10 நிமிடம் கழித்து நமக்கு தேவையான அளவிற்கு

நறுக்கினால் மாமிசத்திலிருந்து வரும் துர் நாற்றம் போகும் கிருமிகள் அழியும்.

கேக் தயாரிக்க : - 

கேக் தயாரிக்கும்போது முந்திரி, பாதாம் போன்றவைகளை பாலில் ஊற வைத்த பின்னர் சேர்த்தால் அவை கேக்கிளிருந்து விழாது.

வாசனை பொருள் பயன்படுத்த : - 

கடுகு, ஏலக்காய், சீரகம், கிராம்பு போன்ற வற்றை அதிகமாக சேர்த்தால் சுவைதான் கூடுதலாக தெரியும். எனவே இவற்றை அளவாக பயன்படுத்தவும்.

கீரையை சமைக்க : - 

கீரையை சமைக்கும் போது சிறிது சர்க்கரையை சேருங்கள். சத்தும் போகாது. நிறமும் மாறாது. குழந்தை களுக்கு பிடிக்கும்.

மசாலா அரைக்கும் போது : - 

மசாலா அரைக்கும் போது முதலில் காய்ந்த மிளகாயைத் தனியாக வைத்து மசித்துக் கொண்டு பிறகே மற்ற பொருள்களைச் சேர்த்து அரைக்க வேண்டும்.

இல்லை யென்றால் மிளகாய் திப்பி திப்பியாக இருக்கும் உடலுக்கு நல்லதல்ல. ‌.

சூப்பில் உப்பு அதிகம் : - 

சூப்பில் உப்பு அதிகம் ஆகி விட்டால் உருளைக் கிழங்கை துண்டுகளாக்கி போடுங்கள்.

சில நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர் உருளைக்கிழங்கை நீக்கி விட்டு சூப்பை பரிமாறுங்கள்.
முக்கியமான சமையல் குறிப்புகள் ! முக்கியமான சமையல் குறிப்புகள் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on July 20, 2015 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚